நீரில் அடித்துச்சென்று இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

Monday, 18 September 2023 - 18:32

%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
நீரில் அடித்துச்சென்ற இருவர் உயிரிழந்த சம்பவங்கள் ரத்தொட்ட மற்றும் கிரியெல்ல பகுதிகளில் பதிவாகியுள்ளது.

கிரியெல்ல - தம்முல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் ஹல்தொல ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்தொட்ட - லொன்வில் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவர் கருவாவ பகுதியில் ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக ரத்தொட்ட காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் கிரியெல்ல - ரத்தொட்ட காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.