காவல்துறை அதிகாரிகள் மூவர் மீது தாக்குதல்!

Monday, 18 September 2023 - 19:16

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%21
தலாதுவ பகுதியில் நபர்கள் சிலரின் தாக்குதலுக்குள்ளான காவல்துறை அதிகாரி ஒருவர் மற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் இருவர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலாதுவ - குருதெனிய வீதியில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தலாதுவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை அதிகாரி அநாவசியமான முறையில் வீடொன்றுக்குள் உள்நுழைந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த காவல்துறை அதிகாரி மற்றும் கன்ஸ்டபிள் அதிகாரி விடுமுறை நாட்களில் வீட்டுக்கு சென்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

குறித்த அதிகாரிகள் மூவரும் தாக்கப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகியில்லாத நிலையில் சம்பவம் தொடர்பில் தலாதுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.