ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் - மகளிர் கிரிக்கெட் குழாம் அறிவிப்பு!

Monday, 18 September 2023 - 19:31

%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%86%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் குழாம்களை இலங்கை அறிவித்துள்ளது.

சீனாவின் ஹாங்சோவில் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை ஆசிய விளையாட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான குழாமில் உள்ள முரண்பாடு காரணமாக, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தமது இரண்டாம் நிலை அணியை அனுப்ப ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

இந்த அணியில் அஷேன் பண்டார, நுவன் துஷார, நுவனிந்து பெர்னாண்டோ உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், லங்கா ப்ரீமியர் லீக் தொடர்களில் பந்துவீச்சின் மூலம் அதிக கவனத்தை ஈர்த்த விஜயகாந்த் வியாஸ்காந்தும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.

செஹான் ஆராச்சிகே தலைமையிலான ஆடவர் கிரிக்கெட் குழாமில் லசித் குரூஸ்புள்ளே, ஷெவோன் டேனியல், அஷேன் பண்டார, அஹான் விக்கிரமசிங்க, லஹிரு உதார, ரவிந்து பெர்னாண்டோ, ரனித லியனாரச்சி, நுவனிந்து பெர்னாண்டோ, சச்சித ஜயதிலக, விஜயகாந்த் வியாஸ்காந்த், நிமேஷ் விமுக்தி, லஹிரு சமரகோன், நுவன் துஷார மற்றும் இஷித விஜேசுந்தர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை, இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை வென்ற சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி, ஆசிய விளையாட்டு போட்டியிலும் பங்கேற்கவுள்ளது.

சமரி அத்தபத்து தலைமையிலான மகளிர் அணியில் ஹர்ஷிதா சமரவிக்ரம, விஷ்மி குணரத்ன, நிலக்ஷி டி சில்வா, கவிஷா தில்ஹாரி, இமேஷா துலானி, அனுஷ்கா சஞ்சீவனி, ஓஷதி ரணசிங்க, சுகந்திகா குமாரி, இனோகா ரணவீர, உதேஷிகா பிரபோதனி, ஹசினி பெரேரா, குஷினி நுத்யங்கனா, அச்சினி குலசூரிய மற்றும் இனோஷி பெர்னாண்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.