இறுதிப் போட்டியில் இலங்கை தோல்வியடைந்தமை தொடர்பில் சந்தேகம்?

Monday, 18 September 2023 - 20:59

%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3F
ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை தோல்வியடைந்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு காவல்துறை தலைமையகத்திற்கு இன்று முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.

கையூட்டல், ஊழல் மற்றும் பொதுநிதி வீண்விரயத்திற்கு எதிரான வாழ்வுரிமை அமைப்பின் தலைவர் ஜமானி கமந்த துஷார இந்த முறைப்பாட்டை அளித்துள்ளார்.

காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இலங்கை அணி இந்தியாவிற்கு எதிராக மிகக் குறைந்த ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தமை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்தார்.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இந்த போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதன் காரணமாக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கையூட்டல், மோசடி மற்றும் பொது நிதி வீண்விரயத்திற்கு எதிரான வாழ்வுரிமை அமைப்பின் தலைவர் ஜமானி கமந்த துஷார தெரிவித்தார்.