வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேருந்து: 8 பேர் பலி!

Tuesday, 19 September 2023 - 20:04

%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%3A+8+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
இந்தியாவின் - பஞ்சாப் மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தின் சிர்ஹிந்த் ஃபீடர் கால்வாயில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்து இடம்பெறும் போது, பேருந்தில் சுமார் 35 பேர் வரை பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தொடர்ந்தும் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.