விஜய் ஆண்டனியின் மகள் எழுதிய உருக்கமான கடிதம்!

Tuesday, 19 September 2023 - 20:40

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%21
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகளான மீரா இன்று(19) அதிகாலை உயிரிழந்தார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மீராவின் உடல் சென்னை - ஓமந்தூரார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிவடைந்து அவரது பெற்றோர் விஜய் ஆண்டனி - பாத்திமாவிடம் உடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், அவரது உடலானது டி.டி.கே சாலையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், மீராவின் மரணம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது ஒரு கடிதம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் 'ஐ லவ்யூ ஓல். மிஸ் யூ ஓல்' (I love You All, I Miss You All) என்று எழுதப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், பத்து வரிகள் கொண்ட அந்த கடிதம் முழுவதும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளதாகவும், இந்த கடிதம் மீரா மன அழுத்தத்தில் இருந்தபோது எழுதியதா? அல்லது தற்கொலை செய்யும் முன்பு எழுதியதா? என்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.