இலங்கை கிரிக்கெட் வீரர் உட்பட 8 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள்!

Tuesday, 19 September 2023 - 23:23

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+8+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
டி10 கிரிக்கெட் தொடரின்போது எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் மோசடி தடுப்பு சட்டத்தை மீறியமைக்காக இலங்கை உள்ளூர் கிரிக்கெட் வீரர் ஒருவர் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வீரர்கள், அதிகாரிகள் மற்றும் அணி உரிமையாளர்கள் என 8 பேர், குறித்த மோசடி தடுப்பு சட்டத்தின் பல்வேறு சரத்துக்களை மீறியதாக எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் சார்பில், சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற அபுதாபி டி10 லீக் தொடரில் ஆறு அணிகள் பங்கேற்றிருந்தன.

குறித்த லீக்கில் தொடரை சீர்குலைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பிலேயே குறித்த எட்டு பேருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, டி 10 தொடர்களில் பங்கேற்ற, இரண்டு அணிகளின் இணை உரிமையாளர்களான, கிரிஷான் குமார் சௌத்ரி, பரக் சங்வி, துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் அஷார் ஸைடி, உள்ளூர் வீரர் ரிஸ்வான் ஜாவிட், இலங்கை உள்ளூர் வீரர் சாலிய சமன், உதவி பயிற்றுவிப்பாளர் சன்னி டில்லோன், பங்களாதேஷ் வீரர் நஸீர் ஹொசைன் மற்றும் அணி முகாமையாளரான சதாப் அஹமட் ஆகியோருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆறு பேர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள அனைவருக்கும், இன்று முதல் 14 நாட்களுக்குள் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டுமென சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.