லியோ திரைப்படத்தின் `BADASS' பாடல் இன்று!

Thursday, 28 September 2023 - 11:16

%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%60BADASS%27+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%21
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'.
 
இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.

அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'லியோ' திரைப்படம் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி வெளியாக உள்ள நிலையில் 'லியோ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தப்போவதில்லை என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் `BADASS' பாடலின் முன்னோட்ட காணொளி இன்று வெளியானது.

அத்துடன் `BADASS' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.