இலத்திரனியல் வாகன இறக்குமதியால் நன்மையில்லை!

Thursday, 28 September 2023 - 14:01

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%21
இலத்திரனியல் வாகன இறக்குமதி காரணமாக, பொதுமக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 
 
ஒரு நிறுவனத்திற்கு மாத்திரம், இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், சந்தையில் சர்வாதிகாரப்போக்கு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக அந்த சங்கம் குற்றஞ் சுமத்தியுள்ளது. 
 
அத்துடன் தீர்வையின்றி, வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுமானால், அதனூடாக அரசாங்கத்திற்கு எந்தவித வருமானமும் கிடைக்கப்போவதில்லை. 
 
மாறாக, வாகனங்களின் விலையில் பாரிய விலையேற்றமும் ஏற்படும் நிலை உள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.