பேருந்து விபத்தில் 9 பேர் பலி, பலர் படுகாயம்!

Sunday, 01 October 2023 - 15:30

%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+9+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%2C+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21
இந்தியாவின் - தமிழகத்தில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றவர்களின் பேருந்து ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பேருந்தில் 59 பேர் பயணித்துள்ள நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.