காத்மண்டு செல்லவிருந்த விமானம் இரத்து!

Sunday, 01 October 2023 - 23:07

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%21
நேபாளத்தின் காத்மண்டு நகருக்குச் புறப்படவிருந்த ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

யு.எல். 181 என்ற இந்த விமானம் இன்று காலை இரத்து செய்யப்பட்டதாக விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த விமானத்தில் 200 பயணிகள் பயணிக்க காத்திருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், குறித்த பயணிகளில் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடியும் இருந்ததாக எமது விமான நிலையத்துக்கான செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 4 விமானங்கள் புறப்படுவதற்கு தாமதமாகியிருந்தது.

இந்தநிலையில், சிங்கப்பூர், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு பயணிக்கவிருந்த விமானங்கள் பல மணித்தியாலங்கள் தாமதமாக சென்றமை குறிப்பிடதக்கது.