காசா நகரத்திலுள்ள அல்-ஷிஃபா வைத்தியசாலை முற்றுகைக்கு உள்ளாக்கப்படவில்லை என இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த வைத்தியசாலையில் இருந்து வெளியேற விரும்புபவர்கள் வைத்தியசாலையின் கிழக்கு பகுதியின் ஊடாக வெளியேறலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வைத்தியசாலையிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேறுவதற்கு இஸ்ரேலிய இராணுவம் உதவும் என அதன் பேச்சாளர் ரியர் அட்மிரல் டனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையின் நிர்வாகம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய மனிதாபிமான அடிப்படையில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக வைத்தியசாலையை சூழவுள்ள வளாகத்தில், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய ஆயுத படையினர் இடையே மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த தாக்குதல்களின் பொது வைத்தியசாலை பாதிப்புக்கு உள்ளாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தற்போது பிறந்த சிசுக்களை பாதுகாக்கும் வெப்பநிலையை சமநிலைப்படுத்துவதற்கான இயந்திரங்களின் பாவனை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
மின்சார விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உள்ளதனாலேயே வைத்தியர்கள் இந்த செயல்பாட்டிற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காசாவில் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபாவில் தற்போது 500 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இடம்பெயர்ந்த 14 ஆயிரம் பொதுமக்களும் அங்கு தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.