திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த ரசிகர்கள்: சல்மான் கானின் ட்விட்டர் பதிவு

Tuesday, 14 November 2023 - 19:08

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A+%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'டைகர் 3' நேற்று திரையரங்குகளில் வெளியானது

மணீஷ் சர்மா இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படம் முதல் நாளில் மட்டும் இந்திய ரூபாவில் 94 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

'டைகர் 3' படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வரும் நிலையில், மகராஷ்டிராவில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்கள் திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்துள்ளனர்.

இதனால் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த சக ரசிகர்கள் வெளியேறும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்தநிலையில், ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக நடிகர் சல்மான்கான் பதிவு ஒன்றை தனது ட்விட்டர் (x) பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “ 'டைகர் 3' படத்தின் போது திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்தது குறித்து கேள்விப்பட்டேன். இது ஆபத்தானது. நமக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படாத வகையில் படத்தை ரசியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.