நடிகராக களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்?

Tuesday, 14 November 2023 - 20:43

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%3F
தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ்.

மாநகரம் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ச்சியாக கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ என பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு இவர் கொடுத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்தின் 171ஆவது திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இன்னும் சில திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, இவர் ஆர்.ஜே.பாலாஜியின் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

கோகுல் இயக்கத்தில் ’சிங்கப்பூர் சலூன்’ என்கின்ற ஒரு புதிய திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தில் லோகேஷ் கனகரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சினிமா வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன.