பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வோக்னர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
உபாதைக்கு உள்ளாகியுள்ள மேட் ஹென்றிக்கு பதிலாக அவர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
உலகக் கிண்ண தொடரில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் மேட் ஹென்றிக்கு காலில் உபாதை ஏற்பட்டது.
இதனால் ஏனைய போட்டிகளில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், பங்களாதேஷில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்காக உரிய நேரத்தில் அவர் உடல் தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், ஸ்கேன் பரிசோதனைகளில், அவர் குறித்த போட்டிகளில் பங்கேற்கும் வகையில் போதுமான அளவு குணமடையவில்லை என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில், எதிர்வரும் 28ஆம் திகதி முதல் சில்ஹெட்டில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக வேகப்பந்து வீச்சாளர் நீல் வோக்னர் பங்களாதேஷுக்கு புறப்படவுள்ளார்.