இன்று மழை பெய்யக்கூடிய பிரதேசங்கள் தொடர்பான அறிவிப்பு

Monday, 20 November 2023 - 6:52

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
நாட்டின் பல பகுதிகளில் இன்று (20) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.