மிட்செல் மார்ஷ் செய்த செயல் - பலரும் விமர்சனம்!

Monday, 20 November 2023 - 13:05

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷ் தனது கால்களை உலகக்கிண்ணத்தில் வைத்து ஓய்வெடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

மிட்செல் மார்ஷின் குறித்த செயலுக்கு பலரும் தமது விமர்சனங்களை வெளியிட்டுவருகின்றனர்.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இடம்பெற்றது.

குறித்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்தநிலையில், கிண்ணத்தை வெற்றிப்பெற்ற பின்னர், குறித்த கிண்ணத்தின் மீது தனது கால்களை வைத்து மிட்செல் மார்ஷ் ஓய்வெடுப்பது போன்றதொரு புகைப்படத்தை அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் வெளியிட்டார்.

இதனை பலரும் அவமரியாதையான செயல் என விமர்சித்து வருகின்றனர்.