இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணம் வரை இரண்டு வருடங்களுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ராகுல் ட்ராவிட் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி அவுஸ்திரேலிய அணியிடம் 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற உலக டெஸ்ட் செம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியை சந்தித்திருந்தது.
இறுதியாக 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை தோற்கடித்து மகேந்திர சிங் தோனி தலைமையின் கீழ் இந்திய அணி செம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றது.
இந்தநிலையில், இந்த முறை உலகக் கிண்ணத் தொடரை வெற்றிக்கொள்ளும் முனைப்புடன் இந்திய அணியை, தலைமை பயிற்றுவிப்பாளராக ராகுல் டிராவிட் வழிநடத்தியிருந்தார்.
எவ்வாறாயினும், அவரது ஒப்பந்த காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ள போதிலும், இந்திய அணியுடனான அவரது ஒப்பந்தம் நீடிக்கப்படுமா? என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லை.