யாழ்ப்பாணம் - நவாலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபரொருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்.
மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மானிப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.