நாடு முழுவதும் சிவப்பு சீனியை விநியோகிக்க நடவடிக்கை - காமினி ராசபுத்ர

Monday, 20 November 2023 - 20:27

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0
வெள்ளை சீனி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, நத்தார் பண்டிகை காலத்தை இலக்கு வைத்து நாடு முழுவதும் சிவப்பு சீனியை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என லங்கா சீனி நிறுவனத்தின் பணிப்பாளர் காமினி ராசபுத்ர தெரிவித்துள்ளார்.

அண்மையில் அதிகரிக்கப்பட்ட வரி காரணமாக சீனி விலை அதிகரித்தமையால் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

எவ்வாறாயினும், சந்தையில் வெள்ளை சீனிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் அவ்வாறான தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நேற்று தெரிவித்தார்.

நாட்டில் 19,000 மெற்றிக் டன் சீனி கையிருப்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான சூழலில் சீனி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் நோக்கில், வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, சீனி இறக்குமதியாளர்களுடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.