கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு

Monday, 20 November 2023 - 20:30

%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

கண்டி – மடுல்கல பிரதான மார்க்கத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றாக பாதிப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதேநேரம், நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.