மலையகத்திற்கான தொடருந்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
பண்டாரவளைக்கும், ஹப்புத்தளைக்கும் இடைப்பட்ட தொடருந்து மார்க்கத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மலையக தொடருந்து சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, பசறை – மொனராகலை பிரதான வீதியின் கமயவெல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தற்போது, குறித்த பாதையினை சீரமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.