கபில விக்ரமநாயக்க உள்ளிட்ட 4 பேருக்கு விளக்கமறியல்

Monday, 20 November 2023 - 23:10

%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+
சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப்பிரிவின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க உள்ளிட்ட 4 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இம்யுனோகுலோபியுலின் தடுப்பூசி இறக்குமதியில் இடம்பெற்ற மோசடி தொடர்பில், குறித்த 4 பேரும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டிருந்தனர்.