வெலிகம பகுதியில் துப்பாக்கி சூடு - இருவர் படுகாயம்

Saturday, 16 December 2023 - 8:45

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81+-+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
மாத்தறை - வெலிகம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

உந்துருளியில் பயணித்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தெனிபிட்டிய மற்றும் வெலிபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 52 வயதுடைய இருவரே துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வெலிகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளரும் அதன் பணியாளர் ஒருவருமே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.