CPM இன் மகளிர் பிரிவுடன் இணைந்து பயணர்களை வலுவூட்டும் NDB வங்கியானது, இலங்கையில் பெண்களை வலுவூட்டுவதிலும், சமத்துவத்தை மேம்படுத்துவதிலுமான தனது அர்ப்பணிப்பை முன்னெடுக்கும் வகையில் இலங்கை பட்டய தொழில்சார் முகாமையாளர்கள் நிறுவனத்தினது தொழில்சார் பெண்கள் பிரிவின் அலகின் உத்தியோகபூர்வ வங்கியியல் பங்குதாரராக இணைந்துள்ளமையை பெருமையுடன் அறிவித்துக்கொள்கின்றது.
மார்ச் 19 அன்று, சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், இலங்கை பட்டய தொழில்சார் முகாமையாளர்கள் நிறுவனத்தின் (CPM Sri Lanka) தொழில்சார் பெண்கள் தெரிவானது கொழும்பு BMICH இல் ஒரு முக்கிய நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் Zmessenger இன் இணை ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்றதிகாரியுமான திருமதி ஜமயாமி மலாகுலியனா அவர்களின் பிரதான உரை இடம்பெற்றது.
அத்துடன், சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (IBA) பணிப்பாளர் திரு. டியான் மகாம்சும் இதில் கலந்து கொண்டார்.