இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியினுடைய தலைமைப் பயிற்றுவிப்பாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய அணியுடனான ஒப்பந்த காலம் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து அவரை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகக் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இது தொடர்பிலான உத்தியோகபூர்வமான அறிவிப்பினை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்வாகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னதாக ராகுல் டிராவிட் 2016 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவராகச் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.