மகளிருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று இடம்பெறவுள்ளன.
இதன்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் பங்களாதேஷ் மகளிர் மற்றும் மலேசிய மகளிர் அணிகள் மோதவுள்ளன.
அத்துடன் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் இலங்கை மகளிர் மற்றும் தாய்லாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்த போட்டிகள் தம்புள்ளையில் இடம்பெறவுள்ளன.