ஈரானில் எரிபொருள் கடத்திய கப்பல் முற்றுகை

Tuesday, 30 July 2024 - 12:41

%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88
சட்டவிரோதமான முறையில் 1.5 மில்லியன் லீற்றர் எரிபொருளுடன் பயணித்துக் கொண்டிருந்த போது, ஈரான் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ள எரிபொருள் கப்பலில் இலங்கையர்களும் இருக்கக் கூடும் என சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.
 
ஈரானின் தென் மேற்கு பகுதியான புசேர் நகரிலிருந்து இந்த எரிபொருள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
டோகோ இராச்சியத்தின் கொடியுடன் பயணித்த இந்த கப்பலில் 12 பணிக்குழாமினர் இருந்துள்ளனர். அவர்கள் இந்திய மற்றும் இலங்கை பிரஜைகள் என சந்தேகிக்கப்படுகின்றது.
 
அவர்கள் ஈரான் அதிகாரிகளால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.