வயநாட்டில் பாரிய மண்சரிவு - பலி எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு!

Wednesday, 31 July 2024 - 23:11

%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+-+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது. 
 
வயநாடு மாவட்டத்தின் முண்டக்கை, அட்டமலை, சூரல்மலை, குன்ஹோம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று (30) அதிகாலை பெரும்பாலான மக்கள் உறக்கத்திலிருந்தபோது இந்த அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. 
 
200ற்கும் அதிகமானோர் மண்சரிவுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்ற நிலையில், தொடர்ந்தும் மீட்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 
 
இந்த சம்பவத்தில் காயமடைந்த 200 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், 3,000ற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு 45 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
 
தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இந்த அனர்த்தங்கள் பதிவாகியுள்ளதுடன், குறித்த பகுதிகளில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.