மொட்டுக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் - வெளியான அறிவிப்பு!

Friday, 02 August 2024 - 8:57

%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+-+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் புதன்கிழமை வெளியிடப்படும் என அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பத்தரமுல்லை - நெலும் மாவத்தையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (01) சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் புதன்கிழமை அறிவிக்கப்படுவார் எனக் குறிப்பிட்டார்.