தந்தம் கொண்ட யானைகளுக்குத் தட்டுப்பாடு!

Friday, 02 August 2024 - 10:15

%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%21
இந்த ஆண்டுக்கான கண்டி எசல பெரஹெர ஊர்வலத்திற்குத் தந்தம் கொண்ட யானைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.

கண்டி எசல ஊர்வலம் தொடர்பில், நேற்று (01) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் 225 தந்தம் கொண்ட யானைகள் காணப்பட்ட நிலையில், தற்போது 96 மாத்திரமே உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.