2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மகளிர் 66 கிலோ பிரிவு குத்துச் சண்டை போட்டியில் அல்ஜீரியாவின் இமான் கெலிஃப்-புக்கு எதிராக இத்தாலியின் ஏஞ்சலா கரினி மோதியிருந்தார்.
இந்தப் போட்டி தொடங்கிய 46 வினாடிகளில் போட்டியிலிருந்து கரினி விலகினார்.
அல்ஜீரியாவின் இமான் கெலிஃப் தன்னை பலமாகக் குத்தியதாகவும் தனது வாழ்நாளில் இப்படி மோசமான ஒரு குத்தை வாங்கியது இல்லை என்றும் அழுதபடியே கரினி கூறியுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் போது இமான் கெலிஃப் பாலின சோதனையில் பெண் என நிரூபிக்கத் தவறியதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.
ஆனால், அவருக்கு எந்த சோதனையுமின்றி பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்கள் பிரிவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இத்தாலியின் ஏஞ்சலா கரினி கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் அவரை எதிர்த்து விளையாடினார்.
இந்தப் போட்டி தொடங்கிய 30ஆவது வினாடியில் ஏஞ்சலா கரினியின் முகத்தில் பலமாகத் தாக்கியிருந்தார்.
கரினியின் மூக்குப் பகுதியில் பலமாகத் தாக்கியதால் அவருக்கு மூக்கிலிருந்து இரத்தம் வடிந்தது.
அவர் அப்போதே போட்டியை நிறுத்துமாறு கூறியதுடன், தான் இந்தப் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதை அடுத்து இமான் கெலிஃப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதே சமயம், கரினி இந்தப் போட்டியிலிருந்து விலகியதால் இத்தாலிய அணியின் வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டது.
மேலும், தனது தந்தையின் பதக்க கனவையும் தான் நிறைவேற்றவில்லை எனக் கரினி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.