அத்தியாவசிய உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

Friday, 02 August 2024 - 11:19

%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலைகளைக் குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் மொத்த விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டு 240 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

1,020 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை கௌப்பி 998 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒரு கிலோகிராம் சிவப்பு கௌப்பி 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 940 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 265 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.