பேருந்து, பாரவூர்தி நேருக்கு நேர் மோதி விபத்து - 6 பேர் வைத்தியசாலையில்!

Friday, 02 August 2024 - 11:54

%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%2C+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+-+6+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%21
நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியின் தலவாக்கலை – பாமஸ்டன் பகுதியில் இன்று (02) முற்பகல் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்றும், நுவரெலியா நோக்கிப் பயணித்த பாரவூர்தி ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த 6 பேரும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் ஒரு ஆணும், 5 பெண்களும் அடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில், லிந்துலை காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.