இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.
இன்று (02) இடம்பெற்ற மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான அவசர கூட்டத்தின் போது, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறிப் பிரவேசித்த 4 தமிழக மீனவர்கள் நேற்று (01) சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தநிலையில், அவர்களைக் கைது செய்வதற்கு முற்பட்ட போது, இலங்கை கடற்படை கப்பலுடன், தமிழக மீனவர்கள் பயணித்த படகு மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் காயமடைந்தனர்.
அதேநேரம் மேலும் ஒரு மீனவர் காணாமல்போன நிலையில், அவரை மீட்பதற்கான தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், உயிரிழந்த மீனவரின் சடலத்தை இந்தியாவுக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கைதான மீனவர்களையும் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் இராமேஸ்வர மீனவர்கள் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளனர்.