வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோட் (The Greatest Of All Time). இந்தத் திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இதில் நடிகர்களான விஜய், பிரசாந்த், பிரவுதேவா, அஜ்மல், மைக் மோகன், மீனாட்சி சவுத்ரி, லைலா மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 2 பாடல்கள் வெளியாகிய நிலையில், 3ஆவது பாடல் நாளை (03) வெளியிடப்படும் என அண்மையில் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
இன்று (02) காலை 11 மணியளவில் விஜய்யின் கோட் திரைப்படத்தின் புதிய தகவல் வெளியாகியிருந்தது.
இதன்படி, நாளை வெளியாக இருக்கும் கோட் திரைப்படத்தின் 3ஆவது பாடலுக்கான முன்னோட்டம் இன்று மாலை 7 அளவில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.