தோல்விகளை ஏற்றுக்கொள்கிறேன் - எம்.எஸ்.தோனி

Wednesday, 02 January 2013 - 8:19

%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D+-+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, இந்திய கிரிக்கெட் அணி சில தோல்விகளை எதிர்கொண்டு வருகின்றமைக்கும், அண்மையில் ஏற்பட்ட பின்னடைவு தொடர்பிலும் இந்திய கிரிக்கட் அணித் தலைவர் மகேந்திர சிங் டோனிக்கு எதிரான குரல்கள் வலுத்து வருகின்றன.
 
இந்த நிலையில் அண்மையில் சென்னையில் பாகிஸ்தானுக்கு எதிராக இடம்பெற்ற கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியா பின்னடைவை எதிர்நோக்கியது.

குறித்த தருணங்கள் தொடர்பில் அவர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை தான் ஏற்றுக்கொள்வதாக கூறினார்.

இவ்வாறு தெரிவிக்கப்படும் சரமாரியான குற்றச்சாட்டுகளை தான் நல்ல விதமாகவே ஏற்றுக்கொள்வதாக மகேந்திரசிங்க தோனி குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் அது அணியினரை பாதிப்பதில்லை.

சமீபத்தில், சச்சின் டெண்டுல்கர் சராமாரி குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்.

அதை அவர் சகித்துக்கொண்டார். ஒவ்வொருவரும் இதுபோன்று சரமாரி குற்றச்சாட்டுகளை பெறுகிறார்கள் என்று தான் கருதவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.