பூமி தனது பாதையில் சூரியனுக்கு அருகில் செல்கிறது

Wednesday, 02 January 2013 - 8:24

%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81

சூரியனுக்கு அருகே பூமி செல்லும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கோள்கள் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.

இதன் காரணமாக, அவை சூரியனுக்கு மிக அருகிலும், மிக தொலைவிலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சுற்றி வருகின்றன.

இதன்படி, சூரியனை, பூமி நெருங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இதன்போது, பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தொலைவு 14.7 கோடி கிலோமீற்றர்களாக இருக்கும்.

எனினும் இதன் காரணமாக பூமியின் தட்பவெப்ப நிலையில், எவ்வித மாற்றமும் ஏற்படாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.