உறுப்பினர்களுக்கு எதிரான பிரேரணை

Thursday, 03 January 2013 - 13:50

%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+


நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பாக சாட்சி வழங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றத்துக்கு சென்றால், அது நாடாளுமன்றத்தின் வரப்பிரசாத சட்ட மூலத்தின் 17து சரத்தை மீறும் செயல் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகர் சந்திமா வீரகொடி இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில், இந்த சட்டத்தை மீறும் உறுப்பினருக்கு எதிரான பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் தொடர்பிலான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு எதிரான வழக்கு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில், குறித்த தெரிவுக் குழுவில் இடம்பெற்ற அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினாகளும் சமூகமளித்திருக்கவில்லை.
எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் இரா.சம்பந்தன், அவர் சார்பாக அவரது சட்டத்தரணியாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை அனுப்பி இருந்தார்.
அத்துடன் ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்தும் இன்று இடம்பெற்ற இந்த வழக்கில் முன்னிலையாகி இருந்தார்.
அவர்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே, பிரதி சபாநாயகர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்தவழக்கில் கலந்துக் கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்படும் பட்சத்தில், அது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை மேற்கொள்ளும் என்று எமது செய்திப்பிரிவு வினவியது.
இதற்கு பதில் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், இது குறித்து இன்னும் தமக்கு தெளிவில்லை என்றும், அவ்வாறான பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டால், அது குறித்து நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னதாக கட்சி உறுப்பினர்கள் பேசி தீர்மானிப்பர் என்று குறிப்பிட்டார்.