முல்லா நசீர் பலி

Thursday, 03 January 2013 - 13:58

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+

 

பாகிஸ்தானின் போராளிகள் குழுவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முல்லா நசீர் அமெரிக்காவின் வான்தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பி.பி.சி இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அவருடன் மேலும் 5 போராளிகளும் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் வடமேல் வெசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க வான்படையினர் இரண்டு ஏவுகனைத் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இந்த சம்பவத்தில் முல்லா நசீர் மற்றும் அவருடன் இருந்து மேலும் 5 போராளிகள் கொல்லப்பட்டனர்.
முல்லா நசீர் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு போராளிகளை அனுப்பி தாக்குதலை நடத்திய முக்கிய சூத்திரதாரி என்று கருதப்படுகிறது.
ஏற்கனவே அவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் சம்பவம் ஒன்றில் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அவர் அரசாங்கத்துடன் இணைந்து தனியான படை ஒன்றை அமைத்ததாகவும், அந்த படை பாகிஸ்தானின் தலிபான் அமைப்புக்கு எதிராக செயற்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.