சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 48 தசம் 3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி, சற்று முன்னர் வரையில் 6 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 122 ஓட்டங்களைப் பெற்றிருந்தது