20 சியாக்கள் பலி

Friday, 04 January 2013 - 7:33

20+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF

ஈராக்கில் இடம்பெற்ற தற்கொலை கார் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்றில் 20 சியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈராக்கின் முசாயிப் நகரில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சியா முஸ்லிம்களின் புனித நகராக கருதப்படும் கர்பாலாவுக்கு யாத்திரிகளாக சென்றிருந்தவர்களை இலக்குவைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈராக்கில் தொடர்சியாக சியா முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.