டமஸ்கஸ் குண்டு தாக்குதலில் 9 பேர் பலி

Friday, 04 January 2013 - 13:27

%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+9+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
சிரியாவின் தலைநகர் டமாகஸில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

பலர் காயமடைந்திருப்பதாக, அங்குள்ள தொண்டு செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே நேற்று முன்தினம் இதே நகரின் தென்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றின் மீதும் வான்தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இதில் 20 பேர் வரையில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய நாட்களாக சிரியாவின் எரிபொருள் நிலையங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.