சீனாவில் தீ விபத்து

Friday, 04 January 2013 - 19:37

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81++

வட சீன ஹெனான் மாகாணத்தில் இடம்பெற்ற தீ விபத்தொன்றில் ஏழு சிறார்கள் கொல்லப்பட்டதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தனியாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அநாதை பராமரிப்பு நிலையத்தில் தீ பரவியதை அடுத்தே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
தீக்கான காரணம் குறித்து எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை என சின்ஹ_வா செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இரண்டு தசாப்தகாலமாக அநாதரவாக விடப்படும் சிறார்கள் இந்த நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, சென்பெங் கிராமத்தில், சென்ற மாதம் இடம்பெற்ற பிரிதொரு சம்பவத்தில் 23 சிறார்கள் கத்தி குத்துக்கு இலக்காகினர்.