டில்கி மாணவியின் நண்பன்

Saturday, 05 January 2013 - 12:44

%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D

கடந்த மாதம் டில்கியில் ஆறு பேரினால் பேருந்து ஒன்றினுள் வைத்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்த மருத்துவ மாணவியின் நண்பர் முதல் தடவையாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 16ம் திகதி டில்கியில் திரைப்படம் ஒன்றை பார்த்துவிட்டு திரும்பிய குறித்த மருத்துவ மாணவியும் அவரது நண்பரும் பேருந்து ஒன்றில் வைத்து தாக்கப்பட்டனர்.
மருத்து மாணவியை கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியு சந்தேக நபர்களான ஆறு பேரும், அவரது ஆண் நண்பரையும் இரும்பு கம்பிகளை கொண்டு தாக்கியுள்ளனர்.
இதன் போது குறித்த மாணவி காவற்துறையினருக்கு அழைப்பை ஏற்படுத்த முயற்சித்த போதும், அவரது கைப்பேசியை பேருந்தில் இருந்தவர்கள் உடைத்தெரிந்தனர்.
பேருந்தில் இருந்து தாங்கள் தூக்கி எரியப்பட்டு 15 நிமிடங்கள் வரையில், யாரும் தங்களுக்கு உதவ முன்வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சம்பம் இடம்பெற்று 45 நிமிடங்களின் பின்னரே காவற்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
எனினும் அவர் தன்னையே குற்றவாளிகள் போல நடத்தியதாகவும், இந்தவிடயத்தில் காவற்துறையினர் முறையாக செயற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளர்.