இலங்கையில் சக்திவலு மற்றும் தொடர்பாடல் துறை மீளமைப்பதற்காக கொரிய அரசாங்கம் 290 மில்லியன் அமெரிக்கா டொலர்களை வழங்க இணங்கியுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் கடந்த வாரம் கொழும்பிலுள்ள கொரிய தூதரகத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாட்டு அரசாங்கங்களும் தமது கட்டமைப்புகளை மேம்படுத்துவது குறித்து நெருக்கமாக செயற்படவுள்ளதாக தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியின் ஊடாக இந்த செயற்றிட்டத்திற்கான நிதி வழங்கப்படவுள்ளது.
இலங்கை ஏற்கனவே, இலகு கடன் அடிப்படையில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொரிய பொருளாதார அபிவிருத்தி கூட்டுத்தாபன நிதியத்திடம் இருந்து பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.