ஓய்வின்மையே தோல்விக்கு காரணம்

Saturday, 05 January 2013 - 20:19

%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8Dஇந்திய கிரிக்கெட் போட்டியாளர் ஓய்வில்லாமல் போட்டிகளில் விளையாடுவதால், வீழ்ச்சியை தவிர்க்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு மற்றும் சொந்தமண் என்ற பாகுபாடு இல்லாமல் தோல்வியடைந்து வருகின்றனர்.
அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு வர, இந்திய கிரிக்கெட் சபை அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விளையாட்டுத்துறை விமர்சகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டில் இந்திய அணி சொந்த மண்ணில் உலக கிண்ணத்தை வென்றது.
தலைவர் பதவியை குறிவைத்து, வீரர்களுக்கு இடையே மோதலும், யார் உயர்ந்தவர் என்ற பிரச்சினையே அணியின் வெற்றியை அதிகமாக பாதிக்கிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மூன்று வித போட்டிகளிலும் தலைவராக இருக்கும் எம்.எஸ்.தோனியை, குறைந்தபட்சம் டெஸ்டில் இருந்தாவது விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.