இலங்கை அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து அவுஸ்திரேலிய அணியின் வீரர் மைக்கல் ஹசி நீக்கப்பட்டுள்ளார்.
மைக்கல் ஹசி இந்த தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் எதிர்வரும் ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் அவர் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நடைபெற்று வருகின்ற இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியே அவரது இறுதி போட்டியாக அமையவுள்ளது.
இதேவேளை இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 278 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.
ஏற்கனவே இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 294 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
அவுஸ்திரேலியா முதலாவது இன்னிங்ஸில் 9 விக்கட்டுகளை இழந்து 432 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில், ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
இதன்படி அவுஸ்திரேலிய அணி இந்த போட்டியில் வெற்றி பெற, 141 ஓட்டங்கள் தேவை.
ஏற்கனவே இடம்பெற்று முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.