மரபணு பரிசோதனை உறுதி

Sunday, 06 January 2013 - 8:19

%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+


புதுடில்கியில் பேருந்து ஒன்றினுள் வைத்து மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மரபணு பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

இதன்படி, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு பேரினதும் உடைகளில் இருந்த இரத்த கசிவும், வன்புணர்வுக்கு உட்பட்டு உயிரிழந்த மாணவின் இரத்தத்தின் மரபணுக்களும் ஒரே வகையானவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய மரபணு பரிசோதனை மையம் இதனை உறுதி செய்துள்ளது.

இதன்படி இந்த மரபணு அறிக்கை இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்படுமிடத்து, அவர்களுக்கு குறைந்த பட்சம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படாலம் என்று தெரிவிக்கப்படுகிறது.