இலங்கை தோல்வி

Sunday, 06 January 2013 - 11:07

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF


இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி தோல்வி அடைந்தது.
இன்று நிறைவடைந்த இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு 141 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஐந்து விக்கட்டுகளை இழந்து அவுஸ்திரேலியா அணி இந்த இலக்கை அடைந்தது.
இலங்கை முதலாவது இன்னிங்ஸில் 294 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 225 ஓட்டங்களையும் பெற்றிருந்தது.
அவுஸ்திரேலிய தமது முதலாவது இன்னிங்ஸை 9 விக்கட்டுகளை இழந்து 432 ஓட்டங்களை பெற்றிருந்த போது இடைநிறுத்திக் கொண்டது.
இதன்படி மூன்று டெஸ்ட்போட்டிகளையும் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.